‘வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டியவை’ : மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

‘வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டியவை’ : மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு
‘வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டியவை’ : மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவற்றை காணலாம்.

  • நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.
  • அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும். 
  • அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.
  • சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.
  • வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.
  • முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.
  • வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.
  • இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.
  • சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
  • அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.
  • ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.
  • பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.
  • சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.
  • கழிவறைகள், கை - கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com