\
'பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்த வேண்டாம்' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்த வேண்டாம்' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

'பிளாஸ்டிக் தேசிய கொடி பயன்படுத்த வேண்டாம்' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடிகள் பயன்பாட்டை தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் சில நாட்களில் கொண்டாடப்படும் நிலையில் இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆனால் பிளாஸ்டிக் கொடிகளில் அது சாத்தியமாவது இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்திய பின் அதை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதையும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திர தினம் தவிர அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com