கையிருப்பில் நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு வராது - மின்சாரத்துறை அமைச்சர்

கையிருப்பில் நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு வராது - மின்சாரத்துறை அமைச்சர்
கையிருப்பில் நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு வராது - மின்சாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்திருக்கிறார்.

டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்தபின் அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்தார். அப்போது," நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி அனுப்புவதாக கெய்ல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை; இனியும் இருக்காது. மேலும் நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசிவருகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இன்று, அனல்மின் நிலையங்களில் போதிய நிலக்கரி இருப்பில் இல்லாததால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வரும் வாய்ப்புகள் இருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதாகவும், மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தாங்காது தமிழகம் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com