மத்திய மற்றும் தமிழக அரசுகள்
மத்திய மற்றும் தமிழக அரசுகள்எக்ஸ் தளம்

மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு| தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிப்பு; உ.பி-க்கு இவ்வளவு கோடிகளா?

தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வாக 7,268 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
Published on

வரி வருவாயில் கிடைக்கும் தொகையை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக ரூ.1.78 லட்சம் கோடியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பீகாருக்கு 17,921 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மேலும், மத்தியப் பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவிற்கு 11,255 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாயும், தெலங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அக்டோபர் மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதல் தவணையாக 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: கண்ணிவெடி புதைப்பு.. கூடுதல் ராணுவம்! தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!

மத்திய மற்றும் தமிழக அரசுகள்
வரிப் பங்கீடு செய்வதில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சமா? - வெடிக்கும் சர்ச்சை..போராட்டங்கள் அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com