\
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 52% உயர்வு - மத்திய அரசு தகவல்

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 52% உயர்வு - மத்திய அரசு தகவல்

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 52% உயர்வு - மத்திய அரசு தகவல்
Published on
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இத்தகவலை தெரிவித்தார். சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றுக்கு வரி 5 முதல் ஏழரை சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் 60 முதல் 70 சதவிகிதம் வரை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com