தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - மத்திய அரசு அறிக்கையால் அதிர்ச்சி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளது.

அதுவே 2021ம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளதுள்ளதாகவும், தமிழகத்தில் 2019ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020ம் ஆண்டு 6,630 ஆகவும், 2021ம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு விரைவு நீதிமன்றங்கள்,1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போக்சோ நீதிமன்றங்கள் அமைத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com