மாநில முதல்வர்கள், நிதி அமைச்சர்களை சந்திக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வரும் திங்கள் (நவம்பர் 15) அன்று பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த கலந்தாய்வில் தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் டிவி சோமாநாதன் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றின் அலைகளை தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுவானதாக மீட்டெடுக்கும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தனியார் முதலீட்டை ஈர்க்கும் சக்தி கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. தனியார் துறையினரும் பாசிட்டிவாக உள்ளனர்” என அவர் தெரித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தனியார் முதலீட்டை ஈர்க்க நிலம் மற்றும் நீர் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை தளர்த்துவது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் அஜய் சேத். இது மத்திய அரசின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாது மாநில வளர்ச்சிக்கானதாகவும் இருக்கும்.