\
மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு 

மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு 

மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு 
Published on

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.வி. சார்ஜருக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அண்மையில் நிதியமைச்சர் ‌நிர்மலா சீதாராமன் அறிவித்த மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டில் தயாராகும் மின்சார வாகனங்களுக்கு 12 சதவிகித வரியில் இருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com