ஸ்டெர்லைட் விவகாரம்: சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உத்தரவு
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தான் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், ஸ்டெர்லைட் பற்றி ஊடகங்கள் வாயிலாகத்தான் கேள்விப்பட்டதாகவும் கூறினார். இது குறித்து உடனே கவனத்தில் எடுத்துக்கொள்ள அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக ஹர்ஷவர்தன் தெரிவித்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக. தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடை பெற்றது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின் றனர். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை நிறுத்துமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.