பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்
Published on

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். கொரோனா பரவல், மூன்றாவது கொரோனா அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் அரசுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக பேச உள்ளனர்.

இதையடுத்து நாளை மாலை ஐந்து மணிக்கு, பிரதமர் தலைமையில், அமைச்சர்கள் குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் இரண்டு ஆலோசனை கூட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com