மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் எப்படி? - முதற்கட்ட பார்வை

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் எப்படி? - முதற்கட்ட பார்வை
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் எப்படி? - முதற்கட்ட பார்வை

பிரதமர் நாரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவையில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக எல்எல்ஏ நாயினார் நாகேந்திரன் மற்றும் பத்திரிகையாளர் மாலன் ஆகியோர் பகிர்ந்துள்ள கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

நயினார் நாகேந்திரன் (பாஜக எம்எல்ஏ): "இதைநான் வரவேற்கிறேன். தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த முறையில் பணியாற்ற வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு இந்த பதவியை கொடுத்த அகில இந்திய தலைவர் நட்டா அவர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் இந்த நாட்டின் ஒளிவிளக்காக விளங்கக் கூடியவர்கள். அவர்களுக்கு அதிகப்படியான அமைச்சர் பதவி வழங்கியது நிர்வாகம் நல்லபடியாக இருப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைநான் முழுமையாக வரவேற்கிறேன். புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் நல்ல நிர்வாகத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது" என்றார்.

மாலன் (பத்திரிகையாளர்): "எல்.முருகனுக்கு என்ன துறை ஒதுக்குவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த அமைச்சரவையின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கும் முதல் இந்திய அமைச்சரவை இது. இரணடாவதாக 50 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு கணிசமாக அளவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சில துறைகள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது. முக்கியமாக மருத்துவதுறைச் சார்ந்த கேபினட் மினிஸ்டர் மற்றும் அதில் உள்ள துணை அமைச்சர்கள் இரண்டு பேருமே மாற்றப்படுகிறார்கள். அடுத்து, நிதி அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருந்தவருக்கு ஒரு புதிய பொறுப்புடன் அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் இருக்கும் எல்லா மாநிலத்திலும் இருப்பவர்களுக்கும் பாஜக ஜெயிக்காத தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களும் பிரதிநிதிதுவம் பெறக்கூடிய அமைச்சரவையாக இந்த அமைச்சரவை அமைந்திருக்கின்றது. இளைஞர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த விரிவாக்கம் இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றால் தான் அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த மாநிலங்களில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக மூத்த அமைச்சர்கள் கட்சிப் பணிக்கு அணுப்பப்படுகிறார்கள்.

அதேபோல் கோவிட் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அதில், இந்தியாதான் உலக அளவில் அதிக தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடு. ஆனால், நமது மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது சதவீதம் மிகவும் குறைவாக இருக்கிறது. 130 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் 30 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போட்டிருக்கோம். இதை இன்னும் விரைவுபடுத்தும் விதத்தில் புதிய அமைச்சரவை அமையும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com