\
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகிகையில், “மத்திய அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வரவில்லை என ஏற்கெனவே உள்துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்படும். புதுச்சேரி பேரவை கலைக்கப்பட்ட பின் மாநிலத்தை நிர்வகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com