இந்தியா
மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம்.. சுமித்ரா மகாஜன்
மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம்.. சுமித்ரா மகாஜன்
மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், எம்.பி ஒருவர் உயிரிழந்து இருப்பதால், அவை இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுமா? அல்லது பட்ஜெட் திட்டமிட்டபடி இன்று தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை இன்றே தாக்கல் செய்யலாம் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.