திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா மத்திய பட்ஜெட்..?
நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி ஈ.அகமது உயிரிழந்ததை அடுத்து மத்திய பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது.
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். பதவியில் இருக்கும் எம்.பி ஒருவர் உயிரிழந்தால் நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைப்பது மரபு.
எனவே இன்று பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது. இதனிடையே, பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதா..? அல்லது பட்ஜெட்டை தாக்கல் செய்வதா..? என்பது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.