ரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்?

ரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்?
ரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் புகார் : விசாரணையில் மத்திய வேளாண் துறை செயலாளர்?

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 2267 கோடி ரூபாய் டிஎச்எஃப்எல் ஊழலில் மத்திய வேளாண்துறை செயலாளருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 

உத்தரப்பிரதேச மாநில மின்சக்தி கழக ஊழியர்களின் ஓய்வூதிய தொகையை டிஎச்எஃப்எல் நிறுவனத்தில் முதலீடு செய்ய உத்தரப்பிரதேச மின்சக்தி கழகம் முடிவு எடுத்தது. இந்த முடிவை அப்போதையை கழகத்தின் தலைவர் சஞ்சய் அகர்வால் மற்றும் அந்தக் கழகத்தின் நிர்வாக குழு எடுத்தது. இந்த முதலீட்டில் ஊழல் நடைபெற்று உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இது தொடர்பான விசாரணையை உத்தரப்பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் அப்போதையை உறுப்பினர்களான மேலாளர் ஏ.பி.மிஸ்ரா, சுதான்ஷ் திரிவேதி மற்றும் சத்திய பிரகாஷ் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இரண்டு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுகிறது. அவர்களில் ஒருவரான சஞ்சய் அகர்வால் தற்போது மத்திய வேளாண்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல தற்போதைய மின்சக்தி கழக தலைவரான அலோக் குமார் ஐஏஎஸ் என்பவரையும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் அகர்வால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைமை செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com