“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை

“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை
“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நாட்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நாட்டில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் பொதுமக்கள், வணிகம் என அனைத்து தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது தெரியவந்துள்ளது. அதாவது 2013-14 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 3.4 சதவீதமாக இருந்த நிலையில், அதுவே 2015-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016-2017-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 3.9 சதவீதமாக அதிகரித்ததும் தெரியவந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் வேலை செய்ய தயாராக இருந்ததும் அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய தொழிலாளர் பணியக அறிக்கை மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com