விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம்

விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை : தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம்
Published on

தேசிய அளவில் அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக வேலையின்மை பிரச்னை உள்ளது. உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக திகழும் இந்தியாவில், படித்த பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வர நினைக்கும் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்ற உறுதிமொழி இடம்பெறுகிறது.

இந்நிலையில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2017-2018 ஆண்டு காலத்தில் இந்தியாவின் 11 மாநிலங்களில் வேலையில்லா உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹரியான, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வேலையின்மை பிரச்னை உள்ளது. 2011-12ஆம் நடத்தப்பட்ட ஆய்வைவிட தற்போது வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகம் பஞ்சாப், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வேலையின்மை மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com