\
கேரளா: 8 வயது சிறுவனை மது அருந்த கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த சித்தப்பா கைது!

கேரளா: 8 வயது சிறுவனை மது அருந்த கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த சித்தப்பா கைது!

கேரளா: 8 வயது சிறுவனை மது அருந்த கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த சித்தப்பா கைது!
Published on

கேரளாவில் 8 வயது நிரம்பிய தனது அண்ணன் மகனை மது (பீர்) அருந்த கட்டாயப்படுத்திய சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவர் தனது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் மதுக்கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் சிறுவனிடம் பீரைக் கொடுத்து குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு வழியின்றி அதனை வாங்கி குடித்து உள்ளான்.

இதனை மனு வீடியோவாக பதிவு செய்து பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார். இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நெய்யாட்டிங்கரை காவல்துறையினரிடம் இந்த சம்பவம் குறித்து பற்றி புகார் அளித்தனர்.

வைரலான அந்த வீடியோவில், சிறுவனை பீர் குடிக்க சொல்லி மனு கூறுவது பதிவாகியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை மனு அழைத்துச் சென்றதும், மதுபான கடையில் பீர் வாங்கி சிறுவனை குடிக்கக் கூறி கட்டாயப்படுத்தியதும் உண்மை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணன் மகனான சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்தி அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்த மனுவை நெய்யாட்டிங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com