உக்ரைன் போர் – இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது

உக்ரைன் போர் – இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது
உக்ரைன் போர் – இந்தியர்களை அழைத்து வர சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர சென்ற ஏர் இந்தியா விமானம் பாதி வழியிலேயே தாயகம் திரும்பியது.

போர் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் ரஷ்யா திடீரென இன்று காலை முதல் உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் தலைநகர் கீவில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியர்களை அழைத்து வருவதற்காக உக்ரைனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பாதி வழியிலேயே இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com