‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு கல்வியை தொடர முடியாது’- மத்திய அரசு தகவல்

‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு கல்வியை தொடர முடியாது’- மத்திய அரசு தகவல்
‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இங்கு கல்வியை தொடர முடியாது’- மத்திய அரசு தகவல்

உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வந்த மாணவர்கள் தாயகம் திரும்பினர். பாதியிலேயே அவர்களது படிப்பு நின்ற நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை மாணவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு தளர்வுகள் அளித்தால், அது இந்தியாவில் மருத்துவப் படிப்பின் தரத்தை பாதிக்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு விதிகள் இல்லை என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com