UIDAI plans to start biometric update of children through schools soon
model imagemeta ai, x page

குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலமாகவே ஆதார் எண்.. UIDAI விரைவில் தொடக்கம்!

பள்ளிகள் மூலமாகவே குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on

பள்ளிகள் மூலமாகவே குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான பணிகளை தொடங்க இருப்பதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 வயதுக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு ஆதார் எண் இல்லை என ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். 5 வயதிலிருந்து 7 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எண்ணை இலவசமாக பெறலாம் என்றும் 7 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

UIDAI plans to start biometric update of children through schools soon
ஆதார் அட்டைமுகநூல்

பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் எண் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் பதிவை செய்துகொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யத் தவறினால், ஆதார் எண் அவர்களின் முடக்கப்படும் என்றும் புவனேஷ் குமார் கூறியுள்ளார். தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்ளானவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

எனவே, பள்ளிகள் மூலமாகவே குழந்தைகளுக்கு ஆதார் எண் எடுப்பதற்கான பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

UIDAI plans to start biometric update of children through schools soon
IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைப்பு... அமலுக்கு வரப்போவது எப்போது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com