இந்தியா
பல்கலைக்கழகங்களில் சானிட்டரி நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரம்
பல்கலைக்கழகங்களில் சானிட்டரி நாப்கின்கள் எரியூட்டும் இயந்திரம்
உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகளில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் நிறுவ வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
‘தூய்மை இந்தியா’வின் நோக்கமே 2019 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரமான நாட்டை உருவாக்குவதே. இதன் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை சுகாதார முறையில் அகற்றும் வகையில் நாப்கின் அழிக்கும் இயந்திரத்தை ஹெச்.எல்.எல் லைஃப்கேர் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை கழித்துக்கட்ட பாதுகாப்பான முறை இல்லாததால் ஆரோக்கியமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவியர் விடுதிகளில் இந்த இயந்திரங்கள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.