யுஜி நீட் தேர்வு
யுஜி நீட் தேர்வுweb

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு.. தேதி விவரம் அறிவிப்பு!

மே 3ஆம் தேதியில் இளநிலை நீட் தேர்வு நடைபெறும் எனவும், மார்ச் 8ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தேசிய தேர்வுகள் முகமை அறிவித்ததன்படி, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும். விண்ணப்பப் பதிவு மார்ச் 8ஆம் தேதியுடன் முடிவடையும். தேர்வு 13 மொழிகளில் நடைபெறும். கட்டணம் பொதுப்பிரிவுக்கு ₹1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ₹1600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கு ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வருகிற மே 3ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான கால அவகாசம் வரும் மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. நீட்தேர்வுக்கான கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ஆயிரத்து 700 ரூபாயும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆயிரத்து 600ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கு ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com