மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் கடந்த 26-ஆம் தேதி ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அவர்கள் அளித்தனர்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com