‘வகுப்புவாத விஷம பிரச்சாரம் செய்வோரை கடுமையாக எச்சரிக்கிறேன்’ - உத்தவ் தாக்ரே

‘வகுப்புவாத விஷம பிரச்சாரம் செய்வோரை கடுமையாக எச்சரிக்கிறேன்’ - உத்தவ் தாக்ரே
‘வகுப்புவாத விஷம பிரச்சாரம் செய்வோரை கடுமையாக எச்சரிக்கிறேன்’ - உத்தவ் தாக்ரே

வகுப்புவாத பிரிவினைகளை ஏற்படுத்த முயல்பவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறேன் என்று உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டி உள்ளது.  ஆகவே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே இன்று ஃபேஸ்புக் மூலம் நேரலையில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் சமூக ஊடகங்களில் கொரோனா பற்றிய ‘தவறான செய்திகள்’ வெளிவருவதாக  மக்களை எச்சரித்தார்.

இதைப் போன்ற பல வீடியோக்கள் வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் சுற்றுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அப்படியான செய்திகளைப் பரப்பி, வகுப்புவாத பிரிவினைகளை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இது குறித்து அவர், “கோவிட் -19 வைரஸைப் போலவே, ஒரு வகுப்புவாத வைரஸும் இங்கே  உள்ளது. குடிமக்களிடம் தவறான செய்திகளைப் பரப்புவோரையும் பலர்  வேடிக்கை பார்ப்பதற்காகவும் இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றுவோரையும் நான் கடுமையாக எச்சரிக்கிறேன். இந்த கோவிட் -19 வைரஸ்  எந்த மதத்தைப் பார்த்து வருவதில்லை”என்று உத்தவ் தாக்கரே பேஸ்புக் லைவ் உரையின் போது கூறினார்.

மகாராஷ்டிராவில் 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு அது மக்களைப் பொறுத்தது என்றும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் கட்டளைகளை அவர்கள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் உள்ளது என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு  மிக மோசமாக உள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா நோய்த் தொற்று உள்ளதாக  47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த  மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. “இது ஒரு தீமையான கேம். சுய கட்டுப்பாடு கொண்ட கேம். நாம் சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும் ”என்று உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com