நள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்

நள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்
நள்ளிரவில் தாய், மகள் பாதுகாப்புக்கு ஒன்றரை மணிநேரம் காத்திருந்த டிரைவர்

தனியார் டாக்ஸி கார் ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளான தாய் மற்றும் மகள் பாதுகாப்பிற்கு ஒன்றரை மணி நேரம் காத்திருந்துள்ளார்.

பிரியஷ்மிதா குஹா என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனியார் டாக்ஸி நிறுவனம் ஒன்றை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஹே ஊபர் உங்கள் நிறுவன ஓட்டுநர் சந்தோஷ் குறித்து நான் கூற வேண்டும். நேற்றிரவு நாங்கள் தங்கியிருக்கும் இடத்தின் கேட் மூடியிருந்தது. அப்போது நேரம் இரவு 1 மணி. எங்களை காரில் இருந்து இறக்கிவிட்ட பின்னர் அவர் செல்லவில்லை. 1.30 மணி நேரம் காத்திருந்து, கேட் திறந்த பின்னர் சென்றார். அவரால் பெருமைப்படுகிறோம். நானும், எனது தாயும் அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்போம்” என தெரிவித்துள்ளார். 

அத்துடன் அந்த ஓட்டுநருக்கு அடுத்த பயணத்திற்காக சிலர் போன் செய்த போதிலும், நடு இரவில் இரண்டு பெண்களை தனியாக விட்டுவிட்டு வரமுடியாது என அவர் கூறியதாகவும், அப்பெண் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com