Uber face book
இந்தியா
Uber-ல இப்போ படகு சேவையும் ரெடி!
வாடகை கார் சேவைக்கு புகழ் பெற்ற ஊபர் நிறுவனம் படகு சேவையையும் தொடங்கியுள்ளது.
வாடகை கார் சேவைக்கு புகழ் பெற்ற ஊபர் நிறுவனம் படகு சேவையையும் தொடங்கியுள்ளது.
காஷ்மீரில் உள்ள புகழ் பெற்ற தால் (dal) ஏரியில் ஷிகாரா எனப்படும் படகு வீடு சேவையை ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது. தால் ஏரியில் தாங்கள் வழங்கும் படகு சேவை தொழில்நுட்ப வசதிகளும் பாரம்பரியமும் இணைந்ததாக இருக்கும் என ’ஊபர் இந்தியா தலைவர் பிரப்ஜீத் சிங்’ தெரிவித்துள்ளார்.
ஊபர் நிறுவனம் ஐரோப்பாவின் வெனிஸில் ஏற்கனவே படகு சேவை வழங்கி வரும் நிலையில் தற்போது ஆசியாவில் முதல்முறையாக படகு சேவையை தொடங்கியுள்ளது. தால் ஏரியில் ஏற்கனவே 4 ஆயிரம் ஷிகாரா படகுகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஊபரின் வருகை மூலம் படகோட்டிகளின் வருவாய் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது