2 ஆண்டுகளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது‌ சுமார் 6000 பாலியல் புகார்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

2 ஆண்டுகளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது‌ சுமார் 6000 பாலியல் புகார்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்
2 ஆண்டுகளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது‌ சுமார் 6000 பாலியல் புகார்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

2017-18 ஆம் ஆண்டுக‌ளில் உபர் கார் ஓட்டுநர்கள் மீது சுமார் 6‌ ஆயிரம்‌ பாலியல் புகார்கள் வந்து‌ள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபர் நிறுவனம் உலகம்‌ முழுவதும் 70 நாடுகளில் வாடகைக் கார்களை இயக்கி வருகின்றது. இந்நிறுவன கார்களில் பயணிக்கும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதுடன், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவதாகவும் பல நாடுகளில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து லண்டன் உள்பட பல நகரங்களில் உபர் நிறுவனம் கார்களை இயக்குவதற்கான‌ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ‌அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 3 ஆயிரம் பாலியல் புகார்கள் தங்களுக்கு வந்ததாகவும், இது 2017ஆம் ஆண்டை விட 16 சதவிகிதம் குறைவு எனவும் தெரிவித்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சுமார் 2.3 பில்லியன் மக்கள் தங்கள் ‌கார்களில் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உபர், 5 ஆயிரத்து 981 பயணிகளிடமிருந்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.

இருப்பினும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உபர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com