\
கேரள கடலில் குளித்த கூடலூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கேரள கடலில் குளித்த கூடலூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கேரள கடலில் குளித்த கூடலூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Published on

கேரளாவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கூடலூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அகில் மற்றும் சுனீஸ் தனது 5 நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் கண்ணூர் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் கண்ணூர் பகுதியில் உள்ள தார்மடம் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அகில் மற்றும் சுனில் ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் கடலில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com