4 மாடி கட்டிடத்திற்காக தோண்டிய குழியில் விழுந்து 2வயது சிறுவன் உயிரிழப்பு

4 மாடி கட்டிடத்திற்காக தோண்டிய குழியில் விழுந்து 2வயது சிறுவன் உயிரிழப்பு

4 மாடி கட்டிடத்திற்காக தோண்டிய குழியில் விழுந்து 2வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

பாதுகாப்பற்ற நிலையில் கட்டிடத்திற்கான குழியை வைத்திருந்த நில உரிமையாளர் மற்றும் கட்டிட பொறியாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு பெங்களூருவின் கெங்கேரி அருகே கோடிபல்யாவில் கட்டிடபணிகளுக்காக தோண்டிய குழியில் இரண்டு வயது சிறுவன் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இன்று காலை 8.30 மணியளவில் சிறுவன் வினோத்குமாரின் தாயார் தினசரி வேலைகளை கவனித்ததால் அவன் விளையாட வெளியே சென்றான். அவன் தண்ணீரில் விளையாட முயன்றபோது குழிக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

சிறுவனை நீண்ட நேரம் காணவில்லை என்பதால் அவனின் தாயார் மற்றும் சிலர் தேடத் தொடங்கினார்கள். சில மணிநேர தேடலுக்குப் பிறகு, சிறுவனின் உடல் குழியில் மிதப்பதைக் கண்டு அவர்கள் திகைத்துப் போனார்கள். சிறுவனின் தந்தை அமரேஷ், ஒரு தனியார் மருத்துவமனையில் பாதுகாப்புக் காவலராக உள்ளார்.

இந்த குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான கொப்பலில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்து கோடிபல்யாவில் ஒரு கொட்டகையில் வசித்து வந்தது. பாதுகாப்பற்ற குழியை வைத்திருந்த ரமேஷ் என்ற நில உரிமையாளரின் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத நான்கு மாடி வணிக கட்டிடத்தை நிர்மாணிக்கும் பொறியியலாளரும் சிறுவனின் மரணத்துக்கு காரணம் என்று காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com