மெட்ரோ டோக்கன் வழங்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி விரல் எலும்புகள் முறிவு - போலீசார் வழக்குப்பதிவு

மெட்ரோ டோக்கன் வழங்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி விரல் எலும்புகள் முறிவு - போலீசார் வழக்குப்பதிவு

மெட்ரோ டோக்கன் வழங்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுமி விரல் எலும்புகள் முறிவு - போலீசார் வழக்குப்பதிவு
Published on

இரண்டு வயது சிறுமி ஒருவர் மெட்ரோ டோக்கன் வழங்கும் இயந்திரத்தில் கை வைத்திருந்தததை கவனிக்காமல் பணியாளர்கள் அதன் கதவுகளை மூடியதில் சிறுமியின் விரல்கள் நொறுங்கியது.

உத்தம் நகர் கிழக்கு மெட்ரோ நிலையத்தில் நீண்ட நாட்களாக டோக்கன் வழங்கும் இயந்திரம் ஒன்று இயங்காமல் பழுதடைந்து இருந்துள்ளது. இதை அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் அங்கேயே வைத்து இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த மெட்ரோ நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தன் இரண்டு வயது குழந்தையை டோக்கன் இயந்திரத்தின் அருகே நிற்க வைத்து விட்டு ஸ்மார்ட் கார்டை ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளார். அப்போது சிறுமி அருகில் இருந்த பழுதான டோக்கன் இயந்திரத்தில் கையை வைத்திருந்தார். இதை பார்க்காத மெட்ரோ பணியாளர்கள் இயந்திரத்தின் கதவை மூடியுள்ளனர். இதில் சிறுமியின் விரல் எழும்புகள் முறிவடைந்தன.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மெட்ரோ அதிகாரிகளின் அலட்சியபோக்கே இந்த விபத்திற்கு காரணம் எனவும் மகளின் மருத்துவ செலவிற்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

தொடர்ந்து போலீசார் இந்தியன் பீனல் கோட் 287, 337 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், “குழந்தைக்கு எவ்விதத்தில் உதவ முடியுமோ அதை எங்கள் தரப்பில் இருந்து செய்வோம். பணியாளர்களின் கவனக்குறைவால் எதிர்பாராதவிதமாக இச்சம்பவம் நடந்துவிட்டது. இனி தயவுசெய்து மெட்ரோ நிலையத்தில் குழந்தைகளையும் சிறுவர்களையும் தனியே விட்டுவிட்டு செல்லாதீர்கள்” எனத் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com