\
பூ விற்பதற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்ட பெண்கள்: வீடியோ

பூ விற்பதற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்ட பெண்கள்: வீடியோ

பூ விற்பதற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்ட பெண்கள்: வீடியோ
Published on

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இரு பெண்கள் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாளி கோயில் வளாகத்தில் பெண் பூ வியாபாரிகளுக்கிடையே விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரின் முன்னிலையில், இரு பெண்களும் கோயில் அமைந்துள்ள சாலையில், ஒருவருக்கொருவர் முடியை பிடித்து இழுத்தவாறு சண்டையிட்டனர். இந்தச் சண்டையில் பெண்களின் கணவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்.

சாலை வழியாக சென்றவர்கள் சண்டையை நிறுத்த முயற்சித்தும் தோல்வியைச் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை சண்டை நீடித்த நிலையில் அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோயில் அமைந்துள்ள சாலையில் நடந்த இந்த ஆக்ரோஷமான சண்டை பலரை முகம் சுளிக்கவைத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com