மகாராஷ்டிரா: 20 நாட்களில் அடுத்தடுத்து 5 உறவினர்களைக் கொலைசெய்த 2 பெண்கள்! திடுக்கிடும் தகவல்

மகாராஷ்டிராவில் உறவினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராட்விட்டர்

20 நாட்களில் அடுத்தடுத்து குடும்ப உறவினர்கள் 5 பேர் கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அஹீரி தாலுகாவுக்கு உட்பட்ட மகாகான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷங்கர் பிரு கும்பாரே. இவர் உட்பட குடும்பத்தினர் 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில், 20 நாட்களுக்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ஷங்கர் மற்றும் அவரின் மனைவி விஜயா கும்பாரே ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, கடந்த செப்.26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கணவன் மற்றும் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

அவர்களுக்குப் பின் ஷங்கரின் மகள்கள் கோமல் டஹாகோக்கர், வர்ஷா என்ற ஆனந்தா, மகன் ரோஷன் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி கடந்த அக். 8, 14, 15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஷங்கரின் இளைய மகன், அவருடைய கார் ஓட்டுநர், மற்றும் உறவினர் விஜயா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகின்றனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல்-காஸா போர்: மனிதாபிமான இடைநிறுத்த தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த அமெரிக்கா!

தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார்

அதேநேரத்தில், அடுத்தடுத்து நிகழ்ந்த 5 பேரின் மர்ம மரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்துக்குரிய பெண்களான சங்கமித்ரா மற்றும் ரோசா ராம்டேகே ஆகியோரின் நடவடிக்கைகளை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இறுதியில் அவர்கள் இருவரும் சொத்து தகராறு விஷயத்தில் ஷங்கரின் குடும்பத்தை விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சங்கமித்ரா, ஷங்கர் பிரு கும்பாரேவின் மருமகள் ஆவார்.

சொத்து தகராறு: தெலங்கானாவில் விஷம் வாங்கி வந்து 

அதாவது இறந்துபோன ரோஷனின் மனைவியாவார். மற்றொருவரான ரோசா ராம்டேகே, ஷங்கர் மைத்துனரின் மனைவியாவார். விசாரணையில், சங்கமித்ரா தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக ரோஷனை திருமணம் செய்துகொண்டதும், ரோஷன் மற்றும் அவரது மாமியாரால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. அதுபோல் ரோசா ராம்டேகே, தனது மூதாதையர் சொத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் ஷங்கர் குடும்பத்திற்கும் அவருக்கும் பிரச்னை இருந்துள்ளது. இதன்காரணமாகவே ஷங்கர் குடும்பத்திற்கு எதிராளிகளா இருந்த இவர்கள் இருவரும், திட்டமிட்டே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் தெலங்கானா மாநிலம் சென்று விஷத்தை வாங்கி வந்துள்ளனர். அதை, ஷங்கர் குடும்பத்தினருக்கு நீரிலும் உணவிலும் கலந்து கொடுத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகா: போர்க்கொடி தூக்கிய சி.எம்.இப்ராஹிம் அதிரடி நீக்கம்.. அடுத்த மஜத மாநில தலைவர் குமாரசாமி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com