ஹைதரபாத்தில் மோட்டார் மெக்கானிக் நிறுவனம் நடத்தி வரும் கான் என்பவர் இரு சக்கர ஆம்புலன்ஸ் ஒன்றை புதிதாக வடிவமைத்துள்ளார்.
ஏழைகள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போன பெண் ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவரது கணவர் தன் தோளிலேயே தூக்கிச் சென்ற சம்பவம் நடந்தது. இவைதான் தன்னை இரு சக்கர ஆம்புலன்ஸை உருவாக்க வைத்தது என்று கூறுகிறார் கான். இந்த ஆம்புலன்சில் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஸ்ட்ரெச்சர், முதலுதவி பெட்டி ஆகிய வசதிகள் உள்ளன. இதற்கான மொத்த செலவு 1,10,000 ரூபாய் ஆனதாம். வடிவமைப்பு செலவைக் குறைப்பது பற்றியும் அரசு விதிமுறைகளின் படி தனது ஆம்புலன்சை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கான் கூறினார்.