2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு

2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு
2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.  

சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எந்தளவுக்கு வேகமாக நமக்கு கிடைக்கின்றதோ அதே அளவுக்கு அதில் போலியான செய்திகளும் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு செய்தியை அதன் உண்மைத்தன்மையை அறியாமலேயே பரப்புவது என்பது பலரது இயல்பாக ஆகியுள்ளது. செய்திகள் தான் போலியாக உள்ளன என்றால் இப்போது புதியதாக ஒரு பிரச்னை முளைத்துள்ளது. ப்ளே ஸ்டோர் ஆயிரக்கணக்கில் போலியான செயலிகளும் உள்ளன எனப்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது 2 ஆயிரத்து 40 போலியான செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. 

பெரும்பாலான போலி செயலிகள், உண்மையானவற்றை போலவே ஐகான், பெயர் முதலியவற்றை கொண்டுள்ளன. குறிப்பாக TEMPLE RUN, FREE FLOW, HILL CLIMB RACING உள்ளிட்ட வீடியோ விளையாட்டு செயலிகளே போலியானவை என்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு செயலியை எவ்வளவு பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு REVIEWS வந்துள்ளது என்பதன் மூலம் போலியான செயலிகளை கண்டறியலாம் என்றும் தொழிநுட்ப நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com