லஷ்கர் தளபதி சுட்டுக்கொலை

லஷ்கர் தளபதி சுட்டுக்கொலை

லஷ்கர் தளபதி சுட்டுக்கொலை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி வாசிம் ஷா கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்புப்படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த வீரர்கள், தாக்குதல் நடத்தினர்.  பயங்கரவாதிகளும் வீரர்களை நோக்கி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற  துப்பாக்கிச் சண்டையில் வாசிம் ஷா மற்றும் ஹபீஸ் நிசார் ஆகிய இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்ட வாசிம் ஷா, லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி ஆவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com