\
காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Published on: 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தஹாப் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்க தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com