இரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி

இரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி

இரண்டு புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி
Published on

நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 2 புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி.

இந்திய நாட்டில் நிலவிவரும் பொருளாதார சிக்கல் மற்றும் உயர்ந்து வரும் வேலையின்மை ஆகியவற்றை பற்றி ஆலோசிப்பதற்கும் மற்றும் சரியான முடிவுகள் எடுப்பதற்கும் 2 புதிய கேபினட் கமிட்டியை பிரதமர் மோடி அமைத்துள்ளார். அதன்படி  முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான கேபினட் கமிட்டி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான கேபினட் கமிட்டி ஆகிய இரண்டு புதிய கேபினட் கமிட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கேபினட் கமிட்டிகளும் பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் முதலீட்டிற்கான கேபினட் 5 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளனர். அதேபோல வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான கேபினட் 10 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திரசிங் தோமர், ரமேஷ் பொக்ரியால், தர்மேந்திர பிரதான், சந்தோஷ் குமார் கங்வார், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நியமனம், நாடாளுமன்ற விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள் ஆகிய கேபினட் கமிட்டிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com