சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை

சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை
சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை

சத்தீஸ்கர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் 8 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா தெரிவித்துள்ளார். 

மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் சத்தீஸ்கர், மகாராஸ்டிரா மற்றும் தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து என்கவுண்ட்டர் நடத்தி வருகின்றனர். 

சமீப காலமாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய என்கவுண்ட்டரில் 35 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். 

அதனைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பெண்கள் உட்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், சத்தீஸ்கர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் 8 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து சுக்மாவின் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா கூறுகையில், “சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லை பகுதியான கிஸ்டாரம் பகுதியில் இந்தத் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ராய்பூரிலிருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் பாதுகாப்பு படையினர் ஒரு மாவோயிஸ்டுகள் குழுவை எதிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் 8 மாவோயிஸ்டுகளின் உடல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படை வீரர்கள் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.” என பிடிஐ க்கு தகவல் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com