ரூ.100 கோடி மோசடி; மூளையாக செயல்பட்ட  ஓய்வு பெற்ற  ஐஏஎஸ் அதிகாரிகள்

ரூ.100 கோடி மோசடி; மூளையாக செயல்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

ரூ.100 கோடி மோசடி; மூளையாக செயல்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்
Published on

பிரதமர், ஆளுநர் பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி செய்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எம்.பி.சீட், மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த கும்பல் பல மோசடி செய்துள்ளது. இதுகுறித்த சிபிசிஐடி விசாரணையில் பிரதமர், ஆளுநர் அலுவலகம் பெயரில் போலி மெயில் ஐடி உருவாக்கி பணி நியமன ஆணை அனுப்பியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மைசூரைச்சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தது. இதுகுறித்து விசாரணை செய்ததில் பிரதமர் அலுவலகத்தில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com