இந்தியா
தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: குடியரசுத் தலைவர் மாளிகை
தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: குடியரசுத் தலைவர் மாளிகை
தூய்மை இந்தியா, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்டவையே ஆளுநர்கள் மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரியவந்துள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தொடக்க உரையாற்றுவார். தொடர்ந்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆளுநர்களுக்கு விளக்க உள்ளனர்.
பின்னர் பிரதமர் மோடி மாநாட்டில் உரையாற்றுகிறார். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து இரண்டாவது நாளில் ஆலோசிக்கப்படும். அன்றைய தினமே துணை நிலை ஆளுநர்களுக்கான சிறப்பு கூட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது.