\
மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி
Published on: 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக தன் இரு மகள்களை, விவசாயி ஒருவர் பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநில ஜன்சி மாவட்டத்தில் உள்ள, படகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆஷிலால் அஹார்வார் தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். பள்ளி மாணவிகளான ரவினாவும் மற்றும் ஷிவானியும், குடும்ப வறுமையால் வேலையாட்கள் இல்லாத நிலையில் விவசாயப் பணிகளில் தந்தைக்கு உதவி செய்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்கு பதிலாக தன் இரு மகள்களை ஆஷிலால் பயன்படுத்தி வருகிறார். தந்தையின் கடன் சுமை காரணமாக ரவினா மற்றும் ஷிவானி ஆகியோர் இந்த வேலையை பள்ளி நாட்கள் போக விடுமுறை நாட்களில் செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com