\
சாலையில் கல்லூரி பேருந்துகள் ரேஸ்: ஒருவர் பலி

சாலையில் கல்லூரி பேருந்துகள் ரேஸ்: ஒருவர் பலி

சாலையில் கல்லூரி பேருந்துகள் ரேஸ்: ஒருவர் பலி
Published on

டெல்லியில் கல்லூரி பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் மோதியது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைக்கழகப் பேருந்தும் குருகிராமில் இயங்கி வரும் மற்றொரு பல்கலைக்கழகப் பேருந்தும் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் அசுர வேகத்தில் இயக்கியுள்ளனர். பேருந்துகள் தெற்கு டெல்லி பகுதியில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இருவர் மீது மோதியுள்ளது. விபத்தில் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதில் சயினி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் தனியார் கூரியர் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மற்றோரு வாகன ஓட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர்களை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது மற்றும் அதிவேகமாக பேருந்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com