பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்

பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்
பெண் பத்திரிகையாளரிடம் செல்போன் பறித்த கொள்ளையர்கள் - சிசிடிவியில் அம்பலம்

நடந்து சென்ற பெண் பத்திரிகையாளரிடம் கொள்ளையர்கள் செல்போன் பறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இன்றைய தலைமுறையினர் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் கூட இருப்பார்கள், ஆனால் செல்போன் இல்லாமல் ஒருமணி நேரம் கூட இருக்க முடியாது. உலக அளவில் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

செல்போன் எந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ அதேவேளையில் செல்போன் திருட்டும் வழிப்பறியும் அதிகமாகவே நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டு சிசிடிவி மூலம் போலீசாரிடம் சிக்கியது. 

அதேபோன்று தற்போது டெல்லியில் ஒரு செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஓக்லா பகுதியில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் செல்போன் பார்த்துக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரின் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். இதுகுறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com