கேரளா : கார் விபத்தில் மரணம் அடைந்த இரண்டு அழகிகள்!

கேரளா : கார் விபத்தில் மரணம் அடைந்த இரண்டு அழகிகள்!

கேரளா : கார் விபத்தில் மரணம் அடைந்த இரண்டு அழகிகள்!
Published on

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள கொச்சி நகரின் வைட்டிலா பகுதியில் இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் தென்னிந்திய அழகி பட்டம் வென்ற 25 வயது அழகி அன்சி கபீர் மற்றும் கேரள அழகிப் போட்டியில் கடந்த 2019-இல் இரண்டாவது இடம் பிடித்த 26 வயது அழகி அஞ்சனா ஷாஜன் என இருவர் உயிரிழந்துள்ளனர். 

அன்சி, திருவனந்தபுரத்தில் உள்ள ஆலம்கோடு பகுதியை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர். 

இந்த விபத்து அதிகாலை 1.30 மணி அளவில் வைட்டில்லா மற்றும் பளரிவட்டோம் பகுதிக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. அன்சி மற்றும் அஞ்சனா பயணம் செய்த கார் முதலில் இருசக்கரத்தின் மீது மோதி, பின்னர் மரத்தில் மோதியுள்ளது. காரில் அன்சி, அஞ்சனா மற்றும் இருவர் என நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில், அன்சி மற்றும் அஞ்சனா இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் பயணம் செய்த மற்ற இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

“அவர்கள் பயணம் செய்த கார் அதிவேகமாக சென்றது. அப்போது திடீரென டூவீலரை வாகனத்திற்கு முன்னாள் பார்த்ததும் ஓட்டுனர் காட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போலீசார் தெரிவித்துள்ளனர். 

அன்சி கடந்த ஆகஸ்ட் மாதம் தான் தென்னிந்திய அழகி பட்டத்தை வென்றிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com