\
காஷ்மீர் சீனாவின் ஒரு பகுதியா? : வரைபடம் வெளியிட்ட ட்விட்டருக்கு இந்தியா எச்சரிக்கை!

காஷ்மீர் சீனாவின் ஒரு பகுதியா? : வரைபடம் வெளியிட்ட ட்விட்டருக்கு இந்தியா எச்சரிக்கை!

காஷ்மீர் சீனாவின் ஒரு பகுதியா? : வரைபடம் வெளியிட்ட ட்விட்டருக்கு இந்தியா எச்சரிக்கை!
Published on

காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டதற்கு ட்விட்டர் நிர்வாகத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தொழில் நுட்பத் துறையின் செயலாளர் அஜய் சாவ்னி, ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டது நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ள அஜய் சாவ்னி, இதற்கு அரசு கடும் அதிருப்தியை தெரிவிப்பதாகவும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ட்விட்டரின் இச்செயல் அதன் நடுநிலைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக அஜய் சாவ்னி கூறியுள்ளார். இந்தியர்களின் உணர்வுகளை ட்விட்டர் மதிக்க வேண்டும் என்றும் அஜய் சாவ்னி வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com