இந்திய ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் ராஜினாமா - காரணம் என்ன?

இந்திய ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் ராஜினாமா - காரணம் என்ன?
இந்திய ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் ராஜினாமா - காரணம் என்ன?

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுகொள்கை இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலகிலேயே அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக சமூக வலைதள நிறுவனங்களின் வர்த்தகம் அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட கோடிக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ள ட்விட்டரின் பொதுகொள்கை துணைத் தலைவர் மோனிக் மெக்கே, “ இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். அதனை இந்தாண்டு தொடக்கத்திலேயே அவர் தெரிவித்தார். இது எங்களுக்கு இழப்புதான்.

5 வருடத்திற்கும் மேலாக இங்கு பணியாற்றிய மகிமா அவரது வாழ்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த நினைக்கிறார். அதனை நாங்கள் மதிக்கிறோம். அவர் வருகிற மார்ச் இறுதி வரை பணியில் இருப்பார்.” என்றார்.

முன்னதாக, குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், ட்விட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கும் எதிராகவும் ட்விட்டர் வாசிகள் ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் 250 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஆனால் அந்த கணக்குகள் அடுத்த இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ட்விட்டர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் மகிமாவின் ராஜினாமா கவனம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com