வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கிய ட்விட்டர்!

வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கிய ட்விட்டர்!
வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கிய ட்விட்டர்!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் டேரெக்ட் மெசேஜ் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது அந்நிறுவனம். அது தொடர்பான ட்வீட்டை ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது. இந்தியாவுடன் பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியை சோதனையிட்டு வருவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

“இந்தியா ட்விட்டரின் முன்னணி சந்தைகளில் ஒன்றாகும். அதனால் தான் நாங்கள் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை சோதித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி. 

இந்த வசதி எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com