சிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்

சிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்
சிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்

சிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை ட்விட்டர் கொண்டாடி வருகிறது

குஜராத் மாநிலம் போர்பந்தரில் 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தார். அகிம்சை வழியில் போராடி இந்தியாவின் சுதந்திரத்துக்காக உழைத்த காந்திஜியின் பிறந்த நாளை இந்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்து முக்கிய நாளாக கொண்டாடி வருகிறது. அதன்படி இன்று காந்தியின் 150வது பிறந்த நாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ஆகியோர் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ட்விட்டர் இந்தியா சில ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜியை உருவாக்கியுள்ளது. இந்த எமோஜி பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி #GandhiJayanti, #MKGandhi, #BapuAt150, #MahatmaGandhi, #MyGandhigiri, #MahatmaAt150, #NexusOfGood உள்ளிட்ட இன்னும் சில ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜி உருவாக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த எமோஜி அக்டோபர் 8ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் ட்விட்டரில் மட்டுமல்லாமல் ட்விட்டர் லைட்டில் இந்த எமோஜி காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com