தானாக பூட்டிய கதவு: காருக்குள் மூச்சு முட்டி சிறுமிகள் பலி!

தானாக பூட்டிய கதவு: காருக்குள் மூச்சு முட்டி சிறுமிகள் பலி!

தானாக பூட்டிய கதவு: காருக்குள் மூச்சு முட்டி சிறுமிகள் பலி!
Published on

காருக்குள் மூச்சுமுட்டி இரட்டைக் குழந்தைகள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

குர்கான் அருகிலுள்ள பட்டாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், வீட்டின் வெளியே தனது ஹூண்டாய் எலன்ட்ரா காரை நிறுத்தியிருந்தார். கார் கதவில் பிரச்னை என்பதால் பூட்டப்படவில்லை. ராணுவ வீரருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரட்டைக் குழந்தைகளான இவர்களுக்கு வயது 5. 
நாய்க்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த இவர்கள், நாய் வெளியே சென்றதால் அவர்களும் வந்தனர். காரின் அடியில் நாய் சென்றது. இவர்கள் காரைப் பிடித்துக்கொண்டு விளையாடிய போது, கதவு திறந்திருந்ததைக் கண்டனர். இதையடுத்து காருக்குள் ஏறினர். கதவுப் பூட்டிக்கொண்டது. சிறிது நேரத்தில் மூச்சு முட்டி அவர்கள் அப்படியே சாய்ந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்தது மாலை 4.30 மணிக்கு. 7.30 மணிக்குத்தான் அந்த ராணுவ வீரர் தனது குழந்தைகளை காணவில்லை என்று தேடியிருக்கிறார். பிறகு காருக்குள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டதும் அலறியடித்தபடி தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காருக்குள் சிக்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com